பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 థ్రి மென் பந்தாட்டம் 8. நொடி நேரத்தில் நூறு நினைவுகளை உண்டாக்கி விளையாடச் செய்வது போலவே, நீண்ட நேர ஒய்வினையும் அளிக்கவல்லது. அதாவது அதிக உழைப்பு - அதற்குள்ளே தேவையான ஒய்வினைத் தருவது என்ற தன்மையிலே ஆட்டம் அமைந்திருக்கிறது. 9. பெண்கள், சிறுவர்கள், முதியவர்களும் ஆடுகின்றார்கள் என்றால் இது மிகவும் பத்திரமான, பாதுகாப்புள்ள ஆட்டமாகும். 10. ஏற்கெனவே கூறியிருந்தவாறு, அதிகச் செலவினை ஏற்படுத்தாத ஆட்டம். பந்தும் மட்டையும் அத்துடன் தளம் அமைக்க சிறு சிறு கோணிப்பைகள் நான்கு, அதிலே மணலைக் கொட்டியோ அல்லது மரத்துளையோ வைத்துக் கட்டிக் கொண்டு விடலாம். இவ்வாறு ஆட்டக்காரர்களைக் கவர்ந்திழுப்பதுடன், பார்வையாளர்களுக்கும் பரபரப்பூட்டிப் பரவசப் படுத்தும் தன்மையில் உட்கார வைத்து, ஆட்டத்தை இறுதி வரையில் உற்சாகமாகக் கண்டுகளிக்க வைத்துவிடும் காந்த சக்தியைக் கொண்டு இலங்குகிறது. அத்துடன் பொழுதினை இன்பமாகப் போக்க உதவுவதுடன், சிறப்பு உடற்பயிற்சியையும் அளிப்பதால், சுற்றுலா, மகிழ்வுலா செல்பவர்கள் கூட, ஒய்வு நேரத்தில் விளையாடி மகிழவும் உதவுகிறது என்பதால் தான், மக்கள் மன்றத்திலே மென் பந்தாட்டம் மேன்மையுடன் ஓங்கி வளர்ந்தது. இத்தகைய சிறந்த ஆட்டத்தின் ஆடும் முறைகளை அடுத்து வரும் பகுதியில் விளக்கமாகக் காண்போம்.

  • ్మe