பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 3. மென்பந்தாட்டத்தில் முக்கிய திறன் நுணுக்கங்கள் பந்தடித்தாடுபவரை நோக்கிப் பந்தெறிதல் (Pitching); அடித்து வருகின்ற பந்தினைத் தவறவிடாமல் சரியாகப் பிடித்துவிடுதல் (Catching) பந்தெறிபவர் எறிகின்ற பந்தைக் குறிபார்த்து அடித்தாடுதல் (Batting); அடித்து விட்டு, ஆடுகள சதுரத்தில் உள்ள நான்கு முனைகளிலும் குறிக்கப்பட்டிருக்கும் தளங்களை மிதித்து விட்டு ஒட்டம் எடுத்தல் (Base Running) இந்த நான்கு திறன் நுணுக்கங்களும் மென்பந்தாட்டத்தில் மிக முக்கியமான திறன்களாகும் என்பது ஆட்ட வல்லுநர்களின் ஆன்ற கருத்தாகும். அத்தகைய அரிய திறன் நுணுக்கச் செயல்கள் எவ்வெவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும். எந்தெந்த முறையில் மெருகேற்றிக் கொள்ளப்பட வேண்டும். என்னென்ன வழிகளில் கையாளப்பட வேண்டும் என்பன போன்ற குறிப்புக்களை பின்வரும் பகுதிகளில்