பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


so- மென பநதாடடம் தெளிவாகவும் தெள்ளிய நீரோடையில் முகம் பார்ப்பது என்பார்களே. அப்படிச் சொல்ல முனைந்திருக்கிறோம். விளையாட்டை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்று விழையும் அன்பர்கள், வேண்டியவற்றை வேண்டியாங்கு பெற்றுப்பயன்துய்க்க அழைக்கிறோம். 1. LöGlssólg560 (Pitching) ஒரு குழுவின் ஒன்பது ஆட்டக்காரர்களிலும், பந்தெறிபவரே மிக முக்கியமான ஆட்டக்காரராகத் திகழ்கிறார். இவரே அந்தக் குழுவிற்குரிய ஆட்டத்தின் திருப்பு முனையாகவும், திட்டமிடுகின்ற வழிகாட்டி யாகவும் திகழ்கின்றார். பந்தடித்தாடுபவரிடமிருந்து 46 அடி தூரத்தில் நின்று கொண்டிருக்கும் இவர், பந்தடித்தாடுபவரின் தளம் நோக்கி சரியாக, நெறியாக, விதிமுறை பிறழாமல் எறிகின்ற எல்லா தடவையிலுமே தவறாமல் வீசி அனுப்புவது என்பது மிகவும் கடினமான காரியந்தான். அதுவும் கீழ்க்கை அசைவின் மூலமாக (Under Hand Motion) பந்தை எறிந்து கொண்டிருப்பது கடினந்தான் என்றாலும், அது அவரது கடமையாயிற்றே! பந்தடி மட்டையுடன் நிற்பவர், தான் எறிகின்ற பந்தை அடித்து ஆடினாலும் அல்லது அடித்தாடா விட்டாலும், அவர் குறிபார்த்து சரியாக எறிந்திட வேண்டும். அத்தகைய திறமையுள்ளவராக இருப்பதால்தான், இவரை மிக முக்கியமானவர் என்று அழைக்கிறோம், மதிக்கிறோம். பந்தை சரியாக எறியத் தெரியாதவரைக் கொண்டிருக்கும் ஒரு குழுவானது, நிச்சயம் தோற்றுப்