பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா ༦་ཝི་> 37 பந்தை எறிவதற்கு மட்டுமே கால் ஆட்சித்திறன் பயன்படுகிறது என்று தான் ஒரு சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி அல்ல. எறிந்த பந்தானது அடிபட்டுத் திரும்பி வரும்போது எளிதாகப் பந்தைப் பிடிக்கவும் வாய்ப்பாக இது உதவுகிறது. அதாவது நிற்கும் நிலையிலேயே ஆட்டக்காரரைத் தயார் நிலையில் நின்றிடவும், நின்றாடவும் தூண்டுகின்ற தன்மையான நிலையாகும். 8. எவ்வாறு பந்தை எறிய வேண்டும் என்று உதவுவதுடன், எவ்வாறு பந்தைக் கட்டுப்படுத்தி எறியலாம் என்ற நெகிழ்ச்சித் தன்மையை உடலுக்குக் கொடுத்து, புதுவித யோசனைகளையும் மனதுக்குள் புகுத்தி விடுகின்ற அளவுக்கு, இந்தக் கால் ஆட்சித்திறன் கைகொடுத்து உதவுகின்றது. 9. எறிகின்ற முறை: இரண்டு கால்களையும் எறிதொடங்கும் நேரத்தில், சுமார் 12 அங்குலத்திலிருந்து ஏறத்தாழ 14 அங்குலம் வரையில் அகலம் இருப்பது போல் விரித்து நின்று, இரு கால்களின் மீதும் உடலின் முழு எடையும் விழுவதுபோல, முதலில் நின்று கொண்டிருக்க வேண்டும். பந்தை ஒரு கையால் நன்றாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு, பந்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் கையை பின்புறமாக கொண்டு சென்று, பிறகு பிடித்திருக்கும் நிலையிலே அதே கையை முன்புறமாகக் கொண்டு வரும் போது, இடப்புற இடுப்பை இடப்புறமாக சற்று அசைப்பதுபோல் நகர்த்தியபடி, இடது காலை ஒரடி முன்னே வைத்து பந்தை எறிய வேண்டும்.