பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 છેઃ மென் பந்தாட்டம் தாலும், பந்தை எறியும்போது விடுகின்ற (Release) முறையில்தான் மாற்றம் உள்ளது. - பந்தைக் கீழ்விழும் பந்தாக (Drop) எறிய வேண்டும் என்றால், பந்துக்குக் கீழ்ப்புற சுழற்சி (Downwar Spin) தந்து எறிய வேண்டும். அதற்கு, பந்தை மிகவும் உறுதியாகவும் கெட்டியாகவும் (Firm Grip) பிடித்து இழுத்து, பந்தை எறிந்துவிடும் சமயத்தில், பந்தடி ஆட்டக்காரருக்கு முன்புறமாக எறிபவரின் உள்ளங்கை தெரிவதுபோன்ற அமைப்பில் எறிந்திட வேண்டும். 4. மிதவேகப் பந்தெறி (slow Ball) பந்தடிக்கக் காத்திருக்கும் ஆட்டக்காரர்கள், வேகமான சுழற்சியுடன் பந்து வரும் என்று காத்திருக்கின்ற நேரத்தில், அவர்களை ஏமாற்றிவிடும் அமைப்பிலே அமைந்துள்ள எறி முறையாகும். பந்தின் பிடி முறை(Grip)யானது மேல் உயர் பந்தெறிக்குள்ளதுபோல்தான். ஆனால், பந்தை உறுதியாகப் பிடித்திருக்காமல், சிறிது தொழதொழ வென்று இருப்பதுபோல் விரல்களால், பிடித்திருந்து, வேகமாக எறிவதுபோல் போக்குக் காட்டிவிட்டு எறிகின்ற முறைதான் மிதவேகப் பந்தெறியாகும். முறைகள் மாறி இருந்தாலும், எறியும் குறியிடம் ஒன்றுதான். குறிப்பிட்ட இடத்திற்கு எறிகின்ற குறிப்புத் தன்மையும்; பந்தெறிவதில் லாவகமான உடல் இயக்கமும்; நினைத்த நேரத்தில் விருப்பம்போல் எறிகின்ற நிறைந்த பயிற்சிமிக்கத் திறனாற்றலும் உள்ள ஒருவரே சிறந்த பந்தெறியாளராக ஆக முடியும்.