பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா ੇ 41 - இனி, சிறந்த ஆட்டக்காரராகப் பயிற்சி பெற விழைகின்ற பந்தெறியாளருக்கு மிகமிக இன்றியமையாத ஆட்டக் குறிப்புக்களைத் தொகுத்துக் கீழே தந்திருக்கின்றோம். ஆடுவதற்கு முன், இக்கருத்துக்களை நன்கு மனதில் பதிய வைத்துக்கொண்டு, பயிற்சி காலங்களில் நல்ல தேர்ச்சியடையத்தக்க அளவில் பழகி வைத்துக் கொண்டு, ஆட்ட நேரத்தில் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் ஆடிப் புகழ்பெற வேண்டும் கருத்துடனே இந்தப் பகுதியைத் தந்திருக்கின் றாம. பந்தெறியாளருக்குரிய சிறப்புக் குறிப்புகள் 1. பந்தெறியத் தயாராக இருக்கின்ற பந்தெறியாளர், பந்தெறிவதற்கு முன்பாக, எதிரே நிற்கும் அடித்தாடு பவரின் திறமையை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அவரது அசைவுகளைக் கண்காணித்துக் கொண்டுவிட்டு, அவரது ஆட்டக்குறைபாடு என்ன (Weakness) என்பதையும் புரிந்து கொண்டு, அந்தத் திறமைக் குறைவுக்கு ஏற்ப பந்தை எறிய வேண்டும். 2. பந்தை ஒரே மாதிரியாக எறிந்து கொண் டிருக்காமல், மேலோ, அல்லது கீழோ அல்லது தளப்பகுதிக்கு சற்றுத் தள்ளியோ என்கின்ற முறையிலே பந்தடி ஆட்டக்காரருக்குப் பந்தை எறிந்து வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். 3. நிமிர்ந்து நின்றவண்ணம் பந்தை அடித்தாட முயல்பவருக்கு, பந்தை உயர்த்திப் போட்டுவிட்டால், அவர் எளிதாக அடித்தாடிவிடுவார். அதனால் அவரை சரியாக ஆடவிடாதவாறு, தாழ்வாகப் போகின்ற (Lowball) பந்தாக எறிந்து கொண்டிருக்க வேண்டும்.