பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 థ్రి மென் பந்தாட்டம் 11. பந்தைக் கட்டுப்பாட்டுடன் எறியவும், எக்காரணத்தை முன்னிட்டும் எறிவதில் அலட்சியமும் அசட்டு மனப்பான்மையும் வந்துவிடக் கூடாது. 12. எறியும்போது குறியோடு எறிய வேண்டும். பதட்டப்படாமல், நிதானத்துடன் லட்சிய நோக்குடன் எறிய வேண்டும். 13. எறிந்துவிட்டதும் தன் கடமை முடிந்து போய்விட்டது என்று எந்தப் பந்தெறியாளரும் நினைத்துக் கொண்டு பேசாமல் நின்றுவிடக் கூடாது. தன் பக்கம் வருகின்ற பந்தைத் தடுத்தாடுவதற்கு ஏற்ற நிலையிலும் தயாராக இருக்க வேண்டும். 14. பந்தெறியாளருக்கு இடப்பக்கம் பந்து வரும்போது, முதல்தளக் காவலர் தடுத்தாட முயல்வார். அவருக்குத் துணையாக இருந்து உதவலாம். அனாவசியமாக, அவர் முயற்சியில் குறுக்கிட்டு கெடுத்துவிடக் கூடாது. 15. தனக்கு எட்டாத பந்தைப் பிடிக்க முயற்சி செய்வது எப்பொழுதும் கூடாது. அதனால், உங்களுக்கும் பின்னால் உள்ளவர்கள் ஒடி வந்து எளிதாகப் பிடிக்கக்கூடிய பந்தை, நீங்கள் தடுமாறிப் பிடிக்க முயன்று முடியாமற்போய் மற்றவர் எளிதாகச் செய்கின்ற காரியத்தை செய்ய இயலாமல் போகும்படி, காரியத்தைக் கெடுத்துவிடக் கூடாது. இத்தகைய முக்கியமான செயல்களின் மூல கர்த்தாவாக விளங்குகின்ற பந்தெறியாளரைத்தான், மிக முக்கியமான ஆட்டக்காரர் என்று முதலிலே விவரித்திருந்தோம். மிகமுக்கியமானவர் என்பதனால், மீதி