பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா థ్రి 45 இருக்கும் எட்டு சக ஆட்டக்காரர்களையும் இவர் எக்காரணத்தைக் கொண்டும் மறந்துவிடாமல் இருப்பது நல்லதாகும். தேருக்கு அச்சாணியாக மட்டுமல்லாமல், தள்ளிக் கொண்டு உருண்டோடும் சக்கரமாகவும் விளங்கு கின்றதைப்போல் பந்தெறியாளர் விளங்குகின்றார். இனி அடுத்த பகுதியான பந்தடி முறையில் உள்ள சிறப்புக்களையும், முக்கிய திறன் நுணுக்கங்களையும் விளக்கமாகக் காண்போம். 2. பந்தைப் பிடித்தாடல் (Catching) பந்தை அடிப்பவருக்கு எறியும் நுணுக்கம் நிறைந்த ஆற்றலைப் போலவே, அடித்து வருகின்ற பந்தைப் பிடித்தாடும் திறனும் மிக முக்கியமானதாகும். பந்தெறிபவருக்கு இணையான சாமர்த்தியமும் சாதுர்யமும் நிறைந்தவராகவே, பிடித்தாடுபவர் விளங்குகின்றார். எங்கேயோ நின்று கொண்டிருக்கிறார், ஏதோ பந்தைப் பிடிக்கிறார், எறிகிறார் என்று அவர் சாதாரணமானவர்போல் தோன்றினாலும், அவரே ஆட்டத்தின் மூல சக்தியாகவும் திகழ்கின்றார். மைதானத்தில், வழிகாட்டியாக இருந்து ஆடுகின்றார். தடுத்தாடும் நிலையில் வல்லமை மிகுந்த இயக்குநராக நடைபோடுகின்றார். பந்தெறிபவருக்கு அவ்வப்போது யோசனை கூறி, எதிரியின் குறையை உணர்த்தி, அதற்கேற்ப எறியச் செய்து, ஆட்ட முறையையே மாற்றியமைக்கவும், ஆட்டத்தில் தைரியமூட்டி விளையாடச் செய்யவும் ஆன சகல சக்தி