பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா ဒါ့ငဲ့- 47 3. பந்தெறிபவர் பந்தை எறியத் தொடங்கியவுடன், சற்று முன்புறம் உடலை வளைத்துக் குனிந்தவாறு இருந்து, பந்தின் மேலேயே பார்வையைச் செலுத்தி, முழுக் கவனத்துடனும் நின்று கொண்டிருக்க வேண்டும். 4. பிடித்தாடும் ஆட்டக்காரர்களுக்குள் இடைவெளி தூரம் அதிகம் இல்லையென்றாலும், ஒருவருக்கொருவர் இடைவெளியை அறிந்து கொண்டு, இடையூறு இல்லாமல் பந்தைப் பிடிக்க முயல வேண்டும். எந்தப் பந்தை யார் பிடிப்பது என்பதில் பிரச்சினையைக் கிளப்பிக் கொள்ளாமல், வாய்ப்புள்ளவர்களுக்கு விட்டுக் கொடுத்து விளையாடுகின்ற தன்மையிலே பிடித்தாடு பவர் தமது பணியைச் செய்திட வேண்டும். 5. பந்தைப் பிடிக்கின்றவர் எப்பொழுதும் முதல் தளத்தில் உள்ளவருக்குத்தான் எறிய வேண்டும். பந்தை அடித்துவிட்ட எதிர்க்குழு ஆட்டக்காரர், உடனே முதல் தளம் நோக்கித்தானே ஒடி வர வேண்டும். ஆகவே, பந்தைப் பிடிப்பவர், காலம் தாழ்த்தாது, உடனே முதல் தளம் நோக்கி விரைவாக எறிய வேண்டும். மேலும், சரியாக எறிய வேண்டும். 6. அதிக உயரமாகப் போகாமலும், தரையோடு தரையாகப் போய்விடாமலும், தரையைவிட 2 அடி உயரத்திற்கு மேலாக, கைக்கெட்டும் உயரத்தில் வருமாறு குறியாக எறிய வேண்டும். அப்பொழுதுதான், எதிர் ஆட்டக்காரரை எளிதாக ஆட்டமிழக்கச் செய்துவிடலாம். 7. முதல் தளத்திற்குத்தானே எறிய வேண்டும் என்று பந்தை எப்பொழுதும் முதல் தளத்திற்கே அனுப்பிக் கொண்டிருப்பதும் முட்டாள் தனத்தின் சிகரமாகும். சமயத்தில் 2ம் தளத்திற்கோ 3ஆம் தளத்திற்கோ எறிய