பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன்னுரை மென் பந்தாட்டம் பற்றி வருகின்ற முதல் தமிழ் நூலாகும் இது. ஒவ்வொரு விளையாட்டைப் பற்றியும் தமிழில் ஒரு நூல் இருக்க வேண்டும் என்று எழுந்த எண்ணத்தின் விளைவாக இதுவரை 12 விளையாட்டுக்களைப் பற்றி தனித்தனி நூல்கள் வெளிவந்திருக்கின்றன. பதின் மூன்றாவது தனி விளையாட்டு நூலாக இந்நூல் எழிலுற வந்திருக்கிறது. மென் பந்தாட்டம் - ஏன் இந்தப் பெயர் பெற்றது, எவ்வாறு தோற்றம் கொண்டது, ஏற்றமுற வளர்வதற்குரிய சூழ்நிலைகள் என்னென்ன என்பதைப் பற்றியெல்லாம் வரலாறும் வளர்ச்சியும் என்ற முதல் பகுதியில் விவரமாகக் கொடுத்திருக்கிறேன். அடுத்து, மென்பந்தாட்டத்தை விரும்பி விளையாட முன்வரும் விவேகமுள்ளவர்களுக்காக, விளையாட்டின் முக்கிய திறன்களைப் பற்றி விளக்கியுள்ளேன். அடுத்து, ஒவ்வொரு ஆட்டக்காரரும் எவ்வாறு இருந்து ஆட வேண்டும் என்ற தகுதியையும் திறமை யையும் எளிமையாகவும் இனிமையாகவும் தந்துள்ளேன். அதனைத் தொடர்ந்து, ஆட்டக்காரர்கள் முக்கியமாக