பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ဇီးဲ- மென் பந்தாட்டம் வேண்டி இருக்கும். இதற்கு மதியூகம், மதிநுட்பம் நிறைய வேண்டும். 8. எதிர்க்குழு ஆட்டக்காரர்களின் ஆட்டக் குறைபாட்டைக் கண்டு கொள்வதுபோலவே, அவர்களின் பந்தடிக்கும் திறமையையும், தளங்களுக்கு இடையே ஒடுகின்ற தந்திர முறைகளையும் செவ்வனே அறிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப தங்கள் பிடித்தாடும் முறையை, நிற்கும் நிலையை அமைத்துக் கொள்ளவும் வேண்டும். 9. பந்தெறியாளர் எப்படி எறிகிறார், அவர் மட்டையில் பந்து பட்டால் எப்படி திரும்பிவரும், எந்த வேகத்தில் வரும் என்றெல்லாம் முன்கூட்டியே யூகித்து உணர்ந்து கொள்கின்ற ஆற்றல் வேண்டும். 10. எப்பொழுதும் ஒரு கையால் பந்தைப் பிடிக்கின்ற பழக்கத்தைத் தவிர்த்திட வேண்டும். இரு கையால் பந்தைப் பிடிப்பது பத்திரமானது. பாதுகாப்பானதாகும். 3. பந்தடித்தாடுதல் (Batting) எல்லா விளையாட்டுக்களிலும் இருப்பதுபோலவே, மென்பந்தாட்டத்திலும் தாக்கி ஆடுதல் (Offence) என்றும், தடுத்தாடுதல் (Defence) என்றும் இரு ஆட்ட முறைகள் உண்டு. தடுத்தாடும் முறையில் பந்தெறிதல், அடித்துவரும் பந்தைப் பிடித்தல், தடுத்தல் (Fielding) என்று அமைந்திருப்பது போலவே, தாக்கி ஆடும் ஆட்டத்தில் முக்கிய பிரிவுகளாக இரண்டு திறன் நுணுக்கங்கள் இணைந்திருக்கின்றன. அவற்றுள் தலையாயது