பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா హ్రీ 51 6. தன்னுடைய தேகத்திற்கு முன்புறமாக இருப்பதுபோல் தான் பந்தைத் தடுத்து அடிக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக, பந்தை அடிக்கின்ற மட்டையானது தோளின் பின்புறம் செல்லலாம். அப்படித்தான் செல்ல வேண்டும். பந்தைத் தனக்கு முன்புறமாக இருப்பது போல் வைத்து அடிக்காவிடில், பந்தின் மேல் படுகின்ற அடியின் வேகமும் விரைவும் அவ்வளவாகக் கிடைக்காமல் போய்விடும். மணிக் கட்டின் நெகிழ்ச்சியுடன் ஆடுவதும், அடித்த பிறகு மட்டையை லாவகமாகப் பின்புறம் கொண்டு போவது போல தொடர்ந்து செல்வதும் (Followthrough) இயல்பாக அமைவதுபோல ஆடவேண்டும். 7. மட்டையின் சரியான பாகத்தில் தான் அடித்தாட வேண்டும். கைப்பிடிக்கு அருகிலோ அல்லது முனையிலோ பந்தை அடித்தாடினால் சமநிலை இழந்து போவதுடன், அடிப்பதில் வேகமும் கிடைக்காமல் போய்விடும். ஆகவே, இரு கால்களினாலும் தரையில் அழுந்த நின்று, பந்தைக் குறிபார்த்து அடித்தாடிட வேண்டும். பந்தை எதிர்பார்த்து மிகவும் குனிந்து கொண்டு நிற்பதும் கூடாது. அது தேவையில்லை. இயல்பாக இயற்கையாகவே நின்று ஆடலாம். 8. பந்தடித்தாடுபவர் தனக்கு எந்தக் கனத்தில் வேண்டுமோ, அந்த எடையில் உள்ளதாகப் பார்த்துத் தான். தனக்குரிய ஆடும் மட்டையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். கையில் மட்டையைப் பிடித்திருக்கும் பொழுது, அடித்தாடுவதற்கேற்ற மன உணர்வும் தெம்பும் ஏற்படுகின்ற இனிய மனோநிலை உண்டாவது போன்ற நிலை எழ வேண்டும்.