பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 ఖ్పే மென் பந்தாட்டம் எடையில் இலேசானதாக இருக்கும் மட்டை, வேகத்துடன் பந்தை அடித்தாடுவதற்கு அவ்வளவாகப் பயன்படாது என்ற ஒரு குறிப்பையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 9. பந்தெறிபவரைப் பற்றியும் (Pitcher), அவருடைய பந்தெறியும் முறையினைப் பற்றியும் தனக்குள்ளே தப்புக் கணக்குப் போடுவது போல, தவறாகக் கணித்துக் கொண்டு (Guess) நிற்கக் கூடாது. அவரது திறமையையும் உயர்வாகவே மதித்து, அடித்தாடுவதற்குத் தயாராகவே நிற்க வேண்டும். 10. பந்தெறிபவருக்கும் பந்தை அடிப்பவருக்கும் இடையில் 46 அடி தூரம் (பெண்கள் என்றால் 40 அடி இருக்கிறது). அங்கிருந்து எறியப்படுகின்ற பந்தானது, வேகமாக வரலாம் (Speed). சுழன்றும் (Spin) வரலாம். வளைந்தும் (Curve) வரலாம். மெதுவாகவும் வரலாம். அந்தத் தன்மையை உணர்ந்து கொண்டு, சரியான நேரத்தில் நேரம் பார்த்து (CorrectTiming) தக்க தருணத்தில் சரியான இடத்தில் வைத்துப் பந்தை அடித்தாடி வேண்டும். - 11. பந்தை அடிக்க முனையும்போது, காலை அகலமாக வைத்திருந்து (Long Stride) அடிப்பது நல்ல ஆட்ட முறையல்ல. அவ்வாறு வைத்து நிற்கும்போது, அது கையையும் தோள் பகுதியையும் தாழ்த்தி விடுவதால் பந்தைக் குறியுடன் பார்க்கும் பார்வையை மறைத்துவிடக் கூடும். உடல் சமநிலையும் சரிந்து போய்விடுவதால், சுறுசுறுப்புடன் இயங்குவதிலும் சிரமம் நிறைந்திருக்கும். ஆகவே, சிறு தப்படி வைப்பதுபோல் நின்று கொண்டால், உடல் சமநிலையில்