பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா હોબ્સ 55 1ஆம் தளத்தில் ஆள் இருந்தால் 1ஆம் தளத்தின் பக்கமாக பந்தைத் தட்டிவிட்டு ஓடினால், 1ஆம் தளக் காப்பாளர் ஓடிவந்து பந்தை எடுப்பதற்குள் எளிதாக ஒடிட முடியும். ஆகவே, நிலைமையை அறிந்து கொண்டு, எந்தப் பக்கமாகப் பந்தை ஆட வேண்டும் என்பதையெலலாம், பயிற்சி செய்யும் காலத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டும். தொட்டாடுபவர் சிறந்த விரைவோட்டக்காரராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த ஆட்ட முறை பலிக்கும். பந்து சரியாகத் தளத்தின் (Base) மீது வருகிற பொழுது தொட்டாடுகின்ற முறையே சாலச் சிறந்தது. பயன்தரத் தக்கது. சரியாக வராத பந்தை அடித்தாட முயல்வது தவறான ஆட்ட முறையாகும். ஒடுமீன் ஒட உறுeன் வருமளவும், வாடியிருக்குமாம் கொக்கு என்பதுபோல, எறியப்படுகின்ற பந்தில் எது சரியாக வருகின்றது என்பதைக் காத்திருந்து, கணித்திருந்து ஆடுகின்ற முறையினைத் தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வப்பொழுது குழுத் தலைவரிடமிருந்து சைகையின் மூலம், ஆடுகின்ற முறையினைப் புரிந்து கொண்டு ஆடுவது நல்ல முறையாகும். மேலே கூறிய முறைகளில் சிறப்பாக ஆடுவதற்கு, பந்தாடும் மட்டையைப் பிடித்திருக்கும் தன்மையாலும் அமையும் என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டையைப் பிடிக்கும் விதத்தை (Grip) மூன்று வகையாகப் பிரித்துக் காட்டுவார்கள்.