பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா Sဲ- 57 பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது. மட்டையைப் பிடித்திருக்கும் பாவனையில் இருந்தே, பதட்டநிலையில் அல்லது அவசர நிலையில், அல்லது ஆத்திரப்படுகின்ற நிலையில் நீங்கள் நிற்கின்றீர்கள் என்பதை எறியும் ஆட்டக்காரர் கண்டு கொண்டுவிடுவார். ஆகவே, உணர்ச்சி வசப்படாமல் நீங்கள் நின்றாட வேண்டும் என்பது மிகவும் சாமர்த்தியமாகும். இனி, பந்தாடும் மட்டையுடன் நின்றாடும் நிலை (Stance) எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வோம். அடித்தாடும் கட்டத்தை நோக்கி நின்று, இடது கால் பாதம் பந்தெறிபவர் பக்கம் பார்ப்பது போலவும், வலது கால் அடித்தாடும் கட்டத்தின் பின்முனையை நோக்கி இருப்பது போலவும், ஏற்றமுறையில் இரு கால்களையும் தேவையான அளவு அகலமாக வைத்து நிற்க வேண்டும். அதாவது உங்கள் தோள் அகல அளவுக்கு ஏற்றவாறு கால்களை அகலமாக்கி நின்றால், உடல் எடையானது இரண்டு கால்களிலும் சமமாக விழும். அதனால் நின்றாட வசதியாக இருக்கும். இடுப்பையும் முழங்கால்களையும் வேண்டுமென்றே வளைக்காமல், இயற்கையாக இருப்பதுபோலவே வைத்துக்கொண்டு நிற்க வேண்டும். அடித்தாடும் கட்டத்தை விட்டுத் துரமாகத் தள்ளி நிற்பதும் அல்லது கட்டத்தை ஒட்டியவாறு நின்று கொண்டிருப்பதும், அடித்தாடுவதற்கு வசதியாக இருக்காது. கட்டத்தை ஒட்டி நின்றால் உடலைப்