பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ ՎolՇԻԵՆԾԾ)ԾՆԱԱII so- 5Տ ஆட்டமிழப்பதற்குள் எத்தனை ஒட்டம் எடுத்திருக்கின் றார்கள் என்பதில்தான் ஆட்டத்தின் அற்புதக் கலைநுணுக்கம் அமைந்திருக்கிறது. பந்தடிக்க வந்துவிட்ட ஒரு ஆட்டக்காரர், சரியான முறையில் (Fair Hit) பந்தை அடித்தாடிவிட்டார் என்றால், அவர் உடனே தள ஆட்டக்காரராக (Base Runner) மாறிவிடுகிறார். அதாவது, அவர் முதலாவது தளம் நோக்கி ஒடித்தான் ஆக வேண்டும். அதிலும் விரைவாக ஒடியே ஆக வேண்டும். நிலைமை சரியில்லாவிட்டாலும் ஒடியே தீர வேண்டும். ஒடிப்போய் முதலாம் தளத்தில் முதல் தளக் காப்பாளர் பந்துடன் தொடுவதற்கு முன் நின்று கொண்டால்தான், ஆட்டத்தைத் தொடர முடியும். ஒடிப்போய் தளத்தில் மிதித்து நின்று கொள்வது ஒரு முறை. அவ்வாறு இயலாமல், ஒடிப்போய் சாய்ந்து சரிந்து விழுந்து தொடுதல் (Silding) என்கின்ற முறையும்