பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 థ్రి மென் பந்தாட்டம் உண்டு. இதில் கீழே விழுந்து சரிவதால், சிராய்ப்பு ஏற்பட வழியுண்டு. இது அபாய முறைதான். சரிந்து தளம் தொடும் முயற்சியால், தளக் காப்பாளரிடமிருந்து தந்திரமாகத் தப்பித்துக் கொள்ள முடிகிறது. அத்துடன், விரைவாக ஒடி உடனே நிற்க முயன்று துன்புறுவதைத் தவிர்க்கவும் பயன்படுகிறது. தள ஓட்டக்காரர் எப்பொழுதும் சுறுசுறுப்பாக நின்று, ஒடத்தயாராகவே நிற்க வேண்டும். தான்தப்பித்து ஒடினால் போதும் என்று, சுயநலத்தோடு நினைத்து விடாமல், ஆட்டத்தை முழுவதும் கண்காணித்துக் கொண்டு, அதற்கேற்ப எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். யாரிடம் பந்திருக்கிறது. அது எங்கே எறியப் படுகிறது, எங்கே போனால் எப்படி எளிதாக ஒடி முடிக்கலாம் என்பனவற்றைக் கவனமாகக் கண்டறிந்து கொண்டு கடந்திட வேண்டும். நன்றாகத் தளம் சுற்றி ஒடும் வல்லவர்களால்தான் எளிதாக ஒட்டம் எடுக்க முடிகிறது. ஆட்டத்தை வெல்லவும் முடிகிறது. தளத்தில் நிற்பவர்கள் நினைத்தாற்போல் ஒடிவிட முடியாது. பந்தெறிபவரின் கையிலிருந்து பந்து புறப்பட்டுப் போனவுடன்தான், இவர் தன்னுடைய தளத்திலிருந்து ஒட முடியும். நடுவரை ஏமாற்றிவிடலாம் என்பதுபோல ஆட்டம் காட்டுவதும், போக்குக் காட்டுவதும் ஆட்டமிழந்திடச் செய்துவிடும் என்பதால், கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

  • ్యe