பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 థ్రి மென் பந்தாட்டம் ஆகவே, பல நுண்திறன்கள் வாய்ந்த குழுவாக தடுத்தாடும் குழுவானது விளங்குவதால்தான், எதிர்க்குழு ஒட்டமெடுக்க முடியாமல் திணறவைக்கின்ற ஆற்றல்களை, தடுத்தாடும் தந்திர முறைகள் என்ற இந்தப் பகுதியில் விளக்கமாகக் கொடுத்திருக்கிறோம். ஏற்கெனவே, பந்தை எறிகின்ற பாங்கினையும், பிடித்து விடுகின்ற முறையினையும் முன்பகுதிகளில் விளக்கி இருக்கின்றோம். இனி, தளக்காப்பாளர்களின் (Basemen) தகுதியையும், ஆடும் திறமைகள் பற்றியும் இங்கே விரிவாகக் காண்போம். 1. (upēso gsmásæmùLumenii (First Baseman) ஆட்ட நேரத்தில் முக்கியமான பங்கினை ஏற்பவராக இருக்கிறார். சில சமயங்களில் ஆட்டத்தில் மிக மிக முக்கியமானவராகவும் இவர் விளங்குகின்றார். அத்தகைய உன்னத இடத்தை வகிக்கும் ஆட்டக் காரருக்குரிய முதல் தகுதி உயரமானவராக இருத்தல் வேண்டும் என்பதே. உயரமானவர்கள் தேவை என்பதால், குள்ள மானவர்கள் இருக்கக் கூடாதா என்றால், குள்ள மானவர்கள்கூட சிறப்பாக இந்த இடத்தில் நின்று ஆடி வருகின்றார்கள். ஆளின் உயரத்திலே என்ன இருக்கிறது? உணர்வு பூர்வமாக, உற்சாகத்துடன், திறமையாக ஆடுவதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதையும் பல குள்ள ஆட்டக்காரர்கள் நிரூபித்துக்காட்டி இருக்கின்றார்கள். பொதுவாக, இடது கைப்பழக்கம் உள்ளவராக (Left Hander) இருந்தால் இந்த இடத்திற்கு மிகவும்