பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 థ్రి மென் பந்தாட்டம் பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்குமே தவிர, விளையாட்டின் வெற்றிக்கோ, சிறப்புக்கோ அது பயன் தராது. 4. பந்தை அடித்துவிட்டு ஓடிவரும் பந்தடி ஆட்டக்காரர், தளத்தினை அடைவதற்கு முன்னரே பந்தைப் பிடித்துத் தளத்தினைத் தொட்டுக் கொண்டுவிடுகிற சாமர்த்தியம் நிறைய வேண்டும். அவ்வாறு பந்தைப் பிடிக்க அல்லது தளத்தினை மிதிக்க என்று அவர் அணுகிவிடுகின்ற ஒவ்வொரு அங்குலமும், பந்தயம் போல்தான் இருக்கும். அத்தகைய அவசர நிலைக்கு ஈடுகொடுக்கின்ற சாதுர்யம் உள்ளவரால்தான் அந்த இடத்தை அலங்கரிக்க முடியும். 6. வருகின்ற பந்துக்கு ஏற்ப பிடிக்கும் நிலையினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பந்தைத் தேடி தன் தளத்தினை விட்டு விலகிப் போய் விடாமலும், போனாலும் உடனே திரும்பி வந்து விடுகின்ற வேகமும் யூகமும் உள்ளவராகவும் இருந்திடல் வேண்டும். 6. பந்தைப் பிடிக்கத் தெரிவதுடன், விரைவாக ஒடக்கூடியவராகவும் இருந்திட வேண்டும். 7. பந்தெறிபவருக்கு உதவியாக இருந்து, உற்ற சமயத்தில் உதவியும் தேவையான நேரத்தில் யோசனையையும் தைரியத்தையும் ஊட்டுபவராகவும் இருக்க வேண்டும். 8. முதல் தளக் காப்பாளர் பந்தை நன்றாகப் பற்றிப் பிடிப்பதற்கு முன்னர், எறிவதற்கு முயலக்கூடாது.