பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா స్ప్రే 65 பந்தெறிபவருக்குப் போகும் பந்தைப்போய் பிடித்திடவும் கூடாது. 9. ஆங்காங்கே நிற்கும் தன் குழு ஆட்டக்காரர் களுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கி, ஆட்டத்தைத் திறமையாக நடத்திச் சென்றிடவும் வல்லவராக விளங்கிட வேண்டும். அவசரமும் ஆவேசமும் இன்றி, இக்கட்டான சூழ்நிலைகளில் கெட்டிக்காரத்தனமாக சமாளித்திட வேண்டும். 2.90sourLirio 356mé &millinsmit (Second Baseman) இவர் மிகவும் பொறுப்புள்ள ஆட்டக்காரராக, மிகவும் முக்கியமான இடத்தில் இருந்து ஆடும் முக்கியமானவராக விளங்குகிறார். தரையோடு தரையாக வரும் பந்தைப் பிடிப்பதிலும் சரி, உயரமாக வந்தாலும் சரி, எப்படி வந்தாலும் தவறிப்போகாமல் பிடித்துவிடுபவராகிய ஆற்றல் உள்ளவரே, இந்த இடத்தில் இருந்து சிறப்பாக ஆட முடியும். 1. தரையுடன் வரும் பந்தைப் பிடிக்க, அவசரமின்றி பந்தைத் தனது பக்கமாக வரவிட்டு, கையிலே பந்து மோதுமாறு செய்துபிடிக்க வேண்டும். அப்பொழுது, பந்துக்கு முன்னால் தமது உடலையும் வைத்து ஒரு தடுப்புபோல் அமைத்துக் கொண்டால், பிடி தவறினாலும் பந்து தேக்கப்பட்டுவிடும். அதனால், பாதுகாப்பான ஆட்டமாகவும் அது அமைந்துவிடும். 2. பந்தைப் பிடிப்பதற்காக, பந்துடன் சண்டை போடக்கூடாது. இலாவகமாக அதனைக் கைப்பற்றிட வேண்டும். தரையில் துள்ளி விழுந்து வருகின்ற பந்தைப்