பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5 வருகிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அருந்துணையாக இருந்து, ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து, பொது நூலகங்களில் எனது நூல்களை வாங்கிப் பேராதரவு அளித்து, உற்சாகத்துடன் மேலும் பல நூல்கள் எழுதுமாறு தூண்டி வருகின்ற பெருந்தகை, தமிழ்நாடு பொது நூலகத்துறை இயக்குநர்மேன்மைமிகு வே.தில்லைநாயகம், M.A., M.L.S; B.T. அவர்களுக்கு என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டுத் துறையில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்கள் வெளிவர வேண்டும் என்ற பேராசையில், பெருமுயற்சியில் ஈடுபட்டிருக்கும் எனக்குப் பெரிதும் உதவி வருகின்ற நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. வணக்கம் அன்பன், எஸ்.நவராஜ் செல்லையா ஞானமலர் இல்லம் சென்னை - 600 017. 1975-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் பதிப்பில் ஆசிரியரின் முன்னுரை அப்படியே அச்சிடப் பட்டுள்ளது.