பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 హ్రీ மென் பந்தாட்டம் அமைந்திருக்கிறது? ஒவ்வொரு தளத்திலும் ஆள் உண்டா? நிற்பவர்கள் யார் யார் என்பதையெல்லாம் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். 7. பந்தெறிபவர் எந்த முறையில் எறிகின்றார்? அடிப்பவர் எவ்வாறு அடிக்க முயற்சி செய்கிறார்? அப்படியானால் பந்து எந்தப் பக்கம் வரும்? என்பதை யெல்லாம் யூகித்தறியும் முன்னறிவுள்ளவராகவும் இருப்பது அவசியம். - 8. முதல், இரண்டாம் தளங்களில் ஒட்டக்காரர்கள் நிற்கும் பொழுது, அல்லது இரண்டாம் தளத்தில் மட்டும் ஒட்டக்காரர் நிற்கின்ற பொழுது இவர் தன்னுடைய மூன்றாம் தளத்தை மட்டுமே காத்து ஆட வேண்டும். அப்பொழுது தொட்டாடிவரும் பந்தை (Bunt) எடுப்பதற்காக ஒடக் கூடாது. அந்த நேரத்தில், எப்படி ஆட வேண்டும் என்பதை முன்கூட்டியோ, அல்லது சைகை மூலமோ கூறி வைத்துக் கொண்டு ஆடிட வேண்டும். 9. கையிலே பந்து இல்லாமல், ஒரு ஒட்டக்காரரை தொடுவதற்கு விரட்டிக் கொண்டு ஒடுவதில் எந்தவித மான லாபமும் இல்லை. பொறுப்புள்ள இடத்தில் இருப்பதால், இவர் நிதானமிழக்காமல் நின்று, சிறப்புற ஆட வேண்டியது மிகமிக அவசியமாகும். 4. Opéin & GlüLumsmit (Short Stop) 1. முன்தடுப்பாளர் நின்றாடுகின்ற இடமானது, ஒரு கடினமான ஆட்டத் திறனை எதிர்பார்க்கின்ற