பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா హ్రీ 69 இடமாகத்தான் அமைந்திருக்கின்றது. இவர் நின்று கொண்டு பந்தைத் தடுத்தாடும் இடமானது, அவருக்குப் பின்னால், விரிந்து பரந்திருக்கும் ஒரு பெரிய பரப்பளவைப் பாதுகாத்து ஆடுவதற்குரிய தன்மையில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. 2. இவர் நிற்கும் இடத்திற்கு பந்து வேகமாகவும் வரலாம் மெதுவாகவும் வரலாம். அதனை தப்பவிடாது, நிச்சயமாகப் பிடித்துவிடுபவராகவே இவர் இருக்க வேண்டும். தரையோடுவரும் பந்தைத் தடுத்துப் பிடிப்பது போலவே, சற்று உயரமாக வரும் பந்தைக்கூட எட்டிப்பிடித்துவிடும் கெட்டிக்காரராகவும் இருந்தால் இந்த இடத்தில் சிறப்பான புகழை எய்திட முடியும். 3. பந்தடித்தவுடன் அதைப் பிடிக்க இவர் எந்த இடத்திற்குப் போனாலும், அங்கிருந்து அவர் யாருக்குப் பந்தை அனுப்பிவிட வேண்டுமோ, அங்கு சரியான கோணத்தில் (Angle) அனுப்பும் சாதுர்யம் உள்ள வராகவும் இருக்க வேண்டும். 4. விரைவாக நினைக்கக்கூடிய மனமும், அதே போல் விரைவாக முடிவெடுக்கக் கூடிய சக்தியும், அதை ஒட்டி, எதையும் முன்னுணர்ந்து ஆடும் வல்லமையும் உடையவரே முன்தடுப்பாளராக இருந்து திறமையுடன் ஆட முடியும். 5. பந்தைப் பிடித்தாடுவது என்பது தடுத்தாடுவோர் அனைவருக்கும் உரிய முக்கிய திறன்தான் என்றாலும், பந்தை உரியவருக்கு உரிய நேரத்தில் வழங்குவதில்தான் இவரது ஆட்டத்திறனின் மாட்சி அமைந்திருக்கிறது. ஆக, இவர் தன் பொறுப்புணர்ந்து, பெருமையுற ஆடிட வேண்டும்.