பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ဒါ့ငဲ့- மென் பந்தாட்டம் 6. அதிக உணர்ச்சி வசப்படாமல் இயல்பாக இருந்து (Natural) சற்று வளைந்து முன்புறமாகக் குனிந்து, உடல் எடை முழுவதும் குதிகாலில் படுவதுபோல நின்றால், பந்தைப் பிடிக்கின்ற சமயத்தில் எளிதாகவும், அதே நேரத்தில் இனிதாகவும் இருக்கும். 7. முன் தடுப்பாளரும் இரண்டாம் தள ஆட்டக்காரரும் இணைந்து ஒன்றிய கருத்துடன் செயல்பட்டால், அந்தக்குழு அதிக அளவிலே பயன் அடையும். ஏனெனில், இவர்களுக்குப் பின்னால் பரந்திருக்கும் ஒரு பெரிய பரப்பளவையல்லவா காத்து நின்றாட முடிகிறது. இவர்களையும் கடந்து பந்து போய்விட்டால், அடித்தாடும் குழுவினர் அதிகமான ஓட்டங்களை’ அல்லவா எடுத்துவிடுவார்கள்! அதனைத் தடுத்து நிறுத்துகின்ற பெரும் பொறுப்பு இவர்கள் மீதல்லவா சுமத்தப்பட்டிருக்கிறது. பொறுப்புணர்ந்து நடந்து கொண்டால், சிறப்பு தானாகவே வந்துவிடாதா! 8. பந்தை அடிக்கும் ஆட்டக்காரர் பந்தைத் தட்டிவிட்டு ஒட இருக்கிறாரா (Bunt) அல்லது வேகமாக அடித்தாட இருக்கிறாரா என்பதை அறிந்து கொள்வதுடன், அவர் எந்தப்பக்கம் பந்தை அடிக்க இருக்கிறார் என்பதின் திசை தெரிந்து விசையறிந்து, அப்பக்கம் நின்றுப் பந்தை பிடிக்க முயலும் திறன் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அதிகப் பயிற்சியின் காரணமாகவே அத்திறன் வரும். 9. தான் எறியக்கூடிய தூரத்தின் அளவைக் கணித்துக் கொண்டு, அதற்கேற்ப சரியாக எறிந்தாடும் o o o o o Ho o சிmமையை ! II I I r-n 4-n I «TTIT.r.......... S. I.Q. S. (<).τ πατεντ (Ra 1axior/TNI A