பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா ဒါ့ငဲ့ - 71 சரியான இடத்தில், சரியான சமயத்தில் நின்று கொண்டு, விரைவாக நினைத்து, முடிவெடுத்து, காரியம் ஆற்றுகின்ற சாதுர்யம் நிறைந்த ஒருவரைப் பெற்றிருக்கும் குழு, பாக்கியம் செய்த குழுவாகும். 5. வெளிப்புற ஆட்டக்காரர்கள் (Out Field Play) 1. பந்தெறிபவர், மூன்று தளங்களிலும் நின்றாடும் தளக்காப்பாளர்கள், முன்தடுப்பாளர் இவர்கள் ஐவரும் உட்புற ஆட்டக்காரர்கள் ஆவார்கள் (Infield). அதாவது ஆடுகள சதுரத்திற்குள்ளே நின்றாடும் ஆட்டக்காரர்கள் ஆவார்கள். பந்தைப் L?iq-L'il 161st (Catcher) பந்தடிப்பவருக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கிறார். இவர் ஆறாவது ஆட்டக்காரர். மீதி மூன்று பேரும் இடப்புறக்காப்பாளர் (Left Fielder), மையக்காப்பாளர் (Centre Fielder), எனப்பிரிந்து ஆடுகின்ற (மூவரும்) வெளிப்புற ஆட்டக்காரர்கள் ஆவார்கள். 2. இவர்களுக்குப் பந்து அடிக்கடி வர வாய்ப் பில்லை. ஆனால், தனக்கு வரவே வராது என்று சொல்லி விடவும் முடியாத நிலை. பந்து எப்பொழுதும் வரும்’ என்ற மனோ நிலையுடன் தான், உடலும் மனமும் சுறுசுறுப்பாக இயங்குகின்ற தன்மையில் நின்று கொண்டிருக்க வேண்டும். 3. தனக்கு வராது என்று தளர்வான நினைவுடன், சோம்பல் சூழ்ந்த தேகத்துடனும் நின்று கொண் டிருந்தால், ஆட்டத்தைக் கோட்டை விட வேண்டியது தான். தனக்குப் பந்து வரவில்லையே என்று பொறுமை இழந்துவிடக் கூடாது. எரிச்சல் பட்ட நிலையில் ஏனோ தானோ என்றும் இருந்துவிடக்கூடாது. 'எனக்கென்ன