பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74 ఖ్ని- மென் பந்தாட்டம் போட்டு விட்டு கற்பனையில் கிடைத்த விடையுடன் இருந்து விடுவது தவறான ஆட்ட முறையாகும். 'இந்தப் பந்தை நான் பிடிக்கிறேன்' என்று பாங்கருக்கு எச்சரித்துவிட்டுப் பிடித்திட முயல்வது தான் ஒற்றுமையான ஆட்டத்தின் உச்சக்கட்டமாகும். 10. வினாடிப் பொழுதிற்குள்ளே முடிவெடுத்து ஆடக்கூடிய, ஒடக்கூடிய இடத்தில் நிற்கின்ற இவர்கள், எங்கு நின்று பந்தைப் பிடித்தாலும் உடனே பந்தை உரியவருக்கு எறிந்து விட வேண்டியது இவரது தலையாய கடமையாகும். காலம் தாழ்த்துவது கூடவே கூடாது. ஆகவே, எப்பொழுதோ பந்து வரும் என்ற இடத்தில் இருந்து ஆடுகின்ற வெளிப்புற ஆட்டக் காரர்கள், ஒவ்வொரு பந்தும் தன்னிடம் தான் வரப்போகிறது என்று எண்ணிக் கொண்டு, தயார் நிலையில் சதாகாலமும் இருந்து ஆட வேண்டும். நேரம் கடத்தாது, பந்தைக் கொடுத்து ஆட வேண்டும். இதுவே அவர்களின் அருமையான பணியாக அமைந்திருக்கிறது.

  • ్మ*