பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா థ్రి 77 _ 4. இருக்கின்ற ஆட்டக்காரர்களை இரு குழுவாகப் பிரித்து எதிரெதிரே 20 அடி இடைவெளி இருக்கின்ற வகையில் நிறுத்தி வைத்திட வேண்டும். 5-ம் எண்ணுள்ளவர் எதிர்க்குழு 1ம் எண் ஆட்டக்காரருக்கு எறிய, அவர் பந்தைப் பிடித்து எதிர்க்குழு 1ம் எண்ணுக்கு எறிய வேண்டும். அவர் எதிர்க்குழு 2க்கும் 2 எதிர்க்குழு 2க்கும், அவர் 3க்கும் என்று மாற்றி மாற்றி எறிந்து எறிந்து பிடித்துப் பழகிக் கொள்ள வேண்டு. கீழே காண்க. 1 2 3 4 5 / 5 4 3 2 1 5 ஆட்டக்காரர்களை இரு குழுவினராகப் பிரித்துக் கொண்டு, அவர்கள் விரும்பிய இடத்தில் மைதானத்தில் நிற்கச் செய்ய வேண்டும். எறியுங்கள் என்று சைகை கொடுத்தவுடன், ஒரு குழுவினர் தங்கள் ஆட்டக் காரர்களுக்கிடையே பந்தை எறிந்து பிடித்துக் கொள்ள முயல வேண்டும். எதிர்க்குழுவினர் அவர்கள் பந்தைப் பிடிக்கவிடாதபடி தடுத்திட வேண்டும். பந்தைப் பிடித்திட அந்தக் குழு தவறிவிட்டால், அடுத்தக் குழு பந்தினைப் பிடித்தெறிய முயல வேண்டும். எதிர்க்குழு தடுத்திட, இவ்வாறு பிடிக்கும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். 6. ஒரு சுவற்றில் வட்டத்திற்குள் வட்டம் என்று நான்கு வட்டங்கள் போட வேண்டும். 20 அடி துரத்திற்கு அப்பால் நின்று கொண்டு, உள்ளேயிருக்கும் சிறு வட்டத்திற்குள் பந்து படுமாறு எறிய வேண்டும். எல்லா ஆட்டக்காரருக்கும் வாய்ப்பு உண்டு. அதில், அதிக முறை