பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிப்புரை வொசகப் பெருமக்களுக்கு வணக்கம்! விளையாட்டுத்துறை தமிழ் இலக்கியத்தில் அதிக மான நூல்களை எழுதிய நூலாசிரியர் என்னும் பெருமைக்குரிய பெருந்தகை டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள். மாணவர் பருவத்தில் விளையாட்டுக்களில் அவருக்கிருந்த ஆர்வமும், ஈடுபாடும் பிற்காலத்தில் புத்தகங்கள் எழுத உதவியதாக அவரே கூறியிருக்கிறார். பல்வேறு விளையாட்டுக்களின் விதிகள், வழி முறைகள், விளையாடும் முறைகள், நுட்பங்களைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவது போன்ற உணர்வுடன் எழுதியுள்ளது இவரது எழுத்தின் சிறப்பு. தமிழக இளைஞர்கள் விளையாட்டுக்களைப் பற்றி அறிந்துகொண்டு, விளையாட்டுக்களில் ஆர்வமுடன் பயிற்சி பெறவும், எழுச்சியுடன் போட்டிகளில் பங்குகொண்டு சர்வதேச அளவில் பதக்கங்களை