பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78 ష్ర్ప மென் பந்தாட்டம் உள்வட்டத்தில் பந்து படுமாறு எறிகின்ற ஆட்டக்காரரே வெற்றி பெற்றார் என்று அறிவிக்க வேண்டும். 7. கால்பந்தாட்டத்தில் அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் உள்ளதுபோல இலக்கினை (Goal) அமைத்துக் கொண்டு, அதில் இலக்குக் காவலர்போல் ஒருவரை முதலில் நிற்கச் செய்ய வேண்டும். பிறகு, தூர இருந்து இலக்கை நோக்கிப் பந்தை வேகமாக தரையோடு தரையாக உருட்டிவிட வேண்டும். இலக்கினுள் நிற்பவர், பந்து தன்னைக் கடந்து போய் விடாதவாறு தடுத்துப் பிடித்திட வேண்டும். இது தடுத்தாடும் ஆட்டத்திற்கு (Fielding) சிறந்த பயிற்சி முறையாகும். 8. சுவற்றிலே பந்தை வேகமாக அடிக்க வேண்டும். அது எதிர்த்து வரும்போது, இருக்கின்ற ஆட்டக்காரர்கள் அனைவருமே தாவிப் பிடிக்க வேண்டும். ஒருமுறை பந்தைப் பிடித்தவருக்கு 1 வெற்றி எண் (point) தரப்படல் வேண்டும். இவ்வாறு பந்தை அதிகமுறை பிடித்து, முதலில் 10 வெற்றி எண்கள் யார் பெறுகின்றாரோ, அவரே வெற்றி பெற்றவர் என்று அறிவிக்க வேண்டும். 9. அதேபோல், பந்தை யார் அதிக தூரம் எறிகின்றார் என்று போட்டி வைத்து, பலமுறை எறியச் செய்ய வேண்டும். 10. 40 அல்லது 50 அடி தூரத்தில் வாயகன்ற ஒரு பெட்டியை வைத்துவிட்டு, ஒருவரை அந்தப் பெட்டிக்குள் விழுமாறு பந்தை எறியச் செய்ய வேண்டும்.