பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 థ్రి மென் பந்தாட்டம் ஆகவே, ஆட்டக்காரர்கள் பயிற்சி காலத்திலேயே, போட்டியின் போது இப்படித்தான் ஆடிட வேண்டும் என்றும், சமயத்திற்கு ஏற்றாற்போல் தந்திர வழிகளைக் கையாள வேண்டும் என்றும் கற்றுப்பழகி வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு சைகை முறை சாலவும் பொருத்தமுள்ளதாகும். தலைக்குல்லாவைத் தொடுவது. கையைக் கட்டிக்கொள்வது, தலையை சொரிவது, கையைத் தட்டுவது. காதைப் பிடித்துக் கொள்வது. ஒவ்வொரு சைகைக்கும் ஒவ்வொரு ஆட்டமுறை உண்டு. சைகையை பார்த்ததும், உடனே ஆட்டத்தின் போக்கை மாற்றி, வேறு ஒரு தந்திரத்தைக் கையாள்வது. இதுபோன்ற கூடி விளையாடும் ஒற்றுமை மிகுந்த குழுவே, எப்பொழுதும் எளிதாக வெல்லும் வாய்ப்பினையும் ஆற்றலையும் பெறுகின்றது என்பதால், ஆட்டக்காரர்கள் பயிற்சிக் காலங்களிலேயே பண்பாடு மிக்கத் திறன் நுணுக்கங்களில் தங்களைத் தேர்ந்தவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அதுவே வருங்கால வாழ்விற்கும் வைப்பு நிதியாக இருந்து, வாழ்வாங்கு வாழ வைக்கும்! ©

  • ్మe