பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


81 6. நடுவருக்குரிய நயமான குறிப்புக்கள் 1. நடுவருக்குரிய தகுதிகள் 1. ஆர்வமுள்ள, அதே நேரத்தில் தன்னால் திறம்பட நடுவராகப் பணியாற்றிட முடியும் என்ற நம்பிக்கை யுள்ள அனைவருமே நடுவராகப் பணியாற்றலாம். அதே நேரத்தில், விதிகளுக்கேற்ப நடக்கும் சரியான அல்லது முறையான ஆட்டம் (Fair play) நடைபெற வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை காட்டும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுவே ஒரு நடுவருக்குரிய முதல் தகுதியாகும். 2. தன்னடக்கம் நிறைந்தவராகவும், சுயக்கட்டுப் பாட்டுடன் சொல்வது போலவே செயலாற்றும் திறமையுடையவராகவும் இருக்க வேண்டும். அதுவே நல்ல நடுவருக்குரிய சிறப்புக் குணமாகும். 3. மென் பந்தாட்டத்திற்குரிய விதிகள் அனைத் தையும் முழுவதுமாகக் கற்றுத் தெரிந்து