பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


82 ဒါ့ငဲ့- மென் பந்தாட்டம் கொண்டிருப்பதுடன், அத்தனை விதிகளையும் ஐயம் திரிபற, தெள்ளத் தெளிவாக உணர்ந்தவராகவும் திகழ வேண்டும். 4. விதிகளை மட்டும் கற்றுணர்ந்த மேதையாகத் திகழ்ந்தால் மட்டும் போதாது. ஒரு ஆட்டக்காரரின் உணர்வையும், குழுத் தலைவர்களின் மனப் பாங்கினையும் பிரதிபலிக்கும் தன்மையுள்ளவராகவும் நடுவர் இருக்க வேண்டும். 5. ஆட்டம் நடைபெறுகின்ற சூழ்நிலையை முன்கூட்டியே உணர்ந்து கொண்டு, எந்த இடத்தில் நின்று கொண்டு கண்காணித்தால் ஆட்டம் முழுவதையும் சரியாகக் கண்காணித்து நடத்திச் செல்ல முடியும் என்பதை யூகித்து முடிவெடுத்திடும் வல்லமையும் வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். 6. ஆட்டம் மிக விரைவான ஆட்டம் என்பதால், மிக விரைவாக மின்னல் வேகத்தில் முடிவெடுக்கும் ஆற்றலும் வேண்டும். அதிவேகம் தேவை என்பதற்காக, எடுக்கும் முடிவில் அவசரப்பட்டு விடவும் கூடாது. நிதானம் தவறாத முடிவினை நிர்ணயித்திடும் நேர்மைப் பண்பாற்றல் வேண்டும். 7. தான் எடுக்கின்ற முடிவு சரியானது என்று உறுதி செய்து கொண்ட பிறகுதான், நடுவர் அறிவிக்க வேண்டும். ஒருமுறை அவ்வாறு முடிவெடுத்துக் கூறி அறிவித்துவிட்டால், எக்காரணம் கொண்டும் அதை மாற்றவே கூடாது. மாற்றுகின்ற முயற்சியையும் ஒரு சிறிதேனும் அனுமதிக்கக் கூடவே கூடாது. 8. தான் எடுத்திருக்கும் முடிவு தவறென்று உடனே கனக்கக் கெரிங்க விட்டாலம், அதனைத் தைரியமாக