பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா థ్రి 83 ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். முடிந்தால், பிறர் முறையிடுவதற்கு முன் மாற்றிட, வேறு வழி இருந்தால் மாற்றி ஆடச் செய்ய முயலவேண்டும். 9. தான் செய்த தவறு உடனே தெரியாமல், கொஞ்ச நேரங்கழித்துத்தான் தெரிந்து கொள்ள முடிகிறது என்றால், அதற்காக வருந்தவோ அல்லது அதேபோல இன்னொரு தவறான முடிவை பாதிக்கப்பட்ட குழுவிற்குத் தந்து சரிகட்டி சகாயம் செய்யவோ முயற்சி செய்ய நினைப்பதும், தவறான பழக்கமாகும். நேர்மையின் நிலைக்களனாக விளங்கவே முயல வேண்டும். 10. ஆட்ட நேரத்தில் சலசலவென்று பேசுவதோ, அல்லது பிறரைப் பேச அனுமதிப்பதோ கூடாது. ஆட்டத்தை சைகை மூலம் (Signal) நடத்திச் செல்வதுதான் நலம் பயப்பதாகும். 2. நடுவருக்குரிய கடமைகள் 1. மென்பந்தாட்டப் போட்டித் தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக ஆடுகளத்திற்கு நடுவரானவர் வந்துவிட வேண்டும். ஆடுகள அளவுகள் சரியான முறையில் பின்பற்றப்பட்டு, ஆடுகளம் சரியாகக் குறிக்கப்பட்டிருக்கின்றவா, ஆட்டத்திற்குத் தேவையான உபகரணங்கள் எல்லாம் உரிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டனவா, அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டு விட்டனவா என்பனவற்றைப் பார்த்து, அவ்வாறு இல்லாவிடில் வைக்கச் செய்துவிட வேண்டும். 2. குழுப் பொறுப்பாளர், மற்றும் ஆட்ட அதிகாரிகளிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு