பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா ဒါ့ငဲ့- 85 ஆடுகளத்தில் பல தளங்கள் இருப்பதால், ஒரு நடுவரே இருந்து கண்காணித்து நடத்திட முடியும் என்பது இயலாத காரியமாகும். எனவே இரண்டு நடுவர்கள் இருந்தால் சரியாகப் பணியாற்ற முடியும். அ. அடித்தாடும் தளத்தின் நடுவர் (Plate Umpire) 1. ஆட்டம் சிறப்புற நடக்கவும், முடிவு பெறவும் கூடியதற்கான அனைத்துப் பொறுப்புக்களையும் நடுவரே ஏற்றுக் கொண்டிருக்கிறார். 2. ஆட்டக்காரர்கள் ஆட்டத்தைத் தொடங்கிடத் தயாராக ஆனவுடன், நடுவர் தளத்திற்குப் பின்புறம் சென்று நின்று கொண்டு, ஆடுங்கள் (Play Ball) என்று கூறி, ஆட்டத்தைத் தொடங்கி வைக்க வேண்டும். 3. பந்தைப் பிடிப்பவரின் (Catcher) பக்கத்திலே நிற்கலாம். ஆனால், அவரது ஆட்டத்திற்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 4. நின்று கொண்டிருக்கும் இடம் பந்தை நன்றாகப் பார்த்து, எறியை சரியானதா என்று முடிவு செய்கின்ற இடமாகப் பார்த்து நிற்க வேண்டும். 5. முழங்கால்களுக்குக் கீழாக அல்லது தோள் பகுதிக்கு மேல் அளவில் வருகின்றதா என்பதைப் பார்க்கும்போது, பந்தைப்பிடிப்பவர் செய்கின்ற செயல்களைத் தவிர்த்து விடவும். பந்து எந்த வழியாக, எந்த நிலையில் எறிந்து வர வேண்டும் என்பதை மட்டும் கற்பனைக் கண்ணோட்ட @Lloré l'I (Imaginary Strike Area) Ltiágil Gosušjá கொள்ள வேண்டும்.