பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 థ్రి மென் பந்தாட்டம் 6. நேராகத்தான் பந்தை எறிய வேண்டும் என்று எறிபவரை நடுவர் வலுக்கட்டாயப் படுத்தக் கூடாது. அடித்தாடும் தளத்திற்குள்ளேயே ஒரத்திலோ, அல்லது ஒரு மூலையிலோ எறிந்தால், அது எறிபவரின் சாமர்த்தியம்தான். அந்த நிலையில் வைத்து, நடுவர் மிகவும் சரியாக, சாமர்த்தியமாக முடிவெடுக்க வேண்டும். 7. பந்தை பந்தடிப்பவர் (Striker) அடித்தாடினார் (Strike) என்றால், வலது கையை உடனே உயரே தூக்கி - முதலாவது அடி என்பதற்கு 1 விரல், 2ஆவது முறை என்றால் 2 விரல் என்று விரல்களை உயர்த்திக் காட்டவும். 8. தவறாக எறிந்த பந்துக்கு (Foul Ball) இடது கையை உயர்த்தலாம். பந்து போன திசைப் பக்கம் பார்த்து அல்லது வாயால் கூறினாலே போதும். இனி நடுவர் என்னென்ன வகையில் தன் பொறுப்பினில் செயல்படுகின்றார் என்று இனி காண்போம். 1. பந்து எத்தனை (Ball) அடித்தது எத்தனை (Strike) என்று கணக்கிடுதல். 2. அடித்தாடிய பந்து சரியானதா (Fair) அல்லது தவறானதா (Foul) என்றும் கூறுதல். 3. அடித்தாடுபவர் பந்தைத் தொட்டாடினாரா (Bunt என்று கூறுதல். 4. பந்தெறியில் வருகிற பந்து அல்லது மட்டையால் அடிக்கப்பட்ட பந்து அல்லது தடுத்தாடுபவரால் எறியப்பட்ட பந்து, அடித்தாடுபவரை அல்லது அவரது