பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7 வென்று நமது தாய்த் திருநாட்டின் புகழைப் பாரெங்கும் பரப்ப வேண்டும் என்பதுதான் டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா அவர்களின் கனவு. அவரது கனவு மெய்ப்பட உதவப்போகும் தமிழக கட்டிளங் காளையர்கள் பலன்பெறும் வகையில், பயிற்சி பெற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நூல்களை எழுதி வெளியிட்டு வந்தார். டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா அவர்களின் மறைவிற்குப் பிறகு அவரது நூல்களை மறு பதிப்பு செய்து வெளியிட்டு, தமிழ் மக்களுக்கு விளையாட்டுக் களைப் பற்றிய விழிப்புணர்வையும், உடல்நலம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் எடுத்துக்கொண்ட முயற்சி பாதியில் நின்றுவிடக்கூடாது என்னும் உயர்ந்த நோக்கில் அவரது நூல்களை மறு பதிப்பு செய்து வருகிறோம். வாசகர்களின் பேராதரவும் அரசு நூலகத்துறை போன்ற பிற நிறுவனங்களும் விளையாட்டுத்துறை நூல்களை வாங்கி ஆதரவு தந்து, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா அவர்களின் கனவு மெய்ப்பட உதவ வேண்டும் என்ற எங்கள் வேண்டுகோளையும் முன் வைக்கிறோம். ஆர்.ஆடம் சாக்ரட்டீஸ் பதிப்பாளர் ராஜ்மோகன் பதிப்பகம்