பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 హ్రీ மென் பந்தாட்டம் 3. ஆடப் பயன்படும் பொருட்கள் (Equipment) 1. பந்தடி மட்டை (The Bat) பந்தடிக்கும் மட்டையின் நீளம் 34 அங்குலத்திற்கு மிகாமலும், அதன் அதிக அகலப் பகுதியானது, 2% அங்குலத்திற்கு மிகாமலும், பாதுகாப்புப் பிடியானது கார்க் அல்லது அதற்கிணையான பொருளால் ஆக்கப்பட்டிருக்கவும் வேண்டும். பந்தாடும் மட்டையின் கைப்பிடி நுனியிலிருந்து, 10 அங்குலத்திற்குக் குறையாமல் 15 அங்குலத்திற்கு மேற்படாமல் நாடா சுற்றப்பட்டிருக்க வேண்டும். இதுவே அங்கீகரிக்கப்பட்ட மென்பந்தாட்டப் பந்தடி மடடையாகும. 2. Lièg (The Ball) மென்மையான, மிருதுவான தன்மையுள்ளதாகத் தைக்கப்பட்டிருக்கும் பந்தின் சுற்றளவு 11 7/8 அங்குலத்திற்குக் குறையாமலும் 12 1/8 அங்குலத்திற்கு மேற்படாமலும், எடை 6 1/4 அவுன்சுக்குக் குறையா மலும் 7 அவுன்சுக்கு மிகாமலும் அமைந்திருக்க வேண்டும். 3. பந்தடித்தாடும் தளம் (Home Plate) ரப்பரால் அல்லது அதற்கிணையான பொருத்தமான பொருளால் ஆக்கப்பட்டிருக்கும் பந்தடித்தாடும் தளமானது. பஞ்சமுகம் (Five Side) கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். பந்தெறிபவரை நோக்கியுள்ள முனைப்பகுதியின் குறுக்களவு 17 அங்குலம் இருக்க வேண்டும்.