பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா အြဲ- 95 ஒவ்வொருவரும் அணிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்பாகம் மென்மையான அல்லது ரப்பர் பொருளால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். மென் பந்தாட்டத்திற் கென்றே தயாரிக்கப்பட்ட காலணிகளையும் அணிந்து கொள்ளலாம். 4. ஆட்டக்காரர்களும், மாற்றாட்டக்காரர்களும், நிரந்தர so, Läsmuirsén (Regular Players) ரு குழுவிற்கு 9 ஆட்டக்காரர்கள் உண்டு. ஒரு குழு னது ஆட்டத்தைத் தொடங்க அல்லது தொடர்ந்து ஆட9 ஆட்டக்காரர்களைக் கட்டாயமாகக் கொண்டிருக்க வேண்டும். ஒன்பது ஆட்டக்காரர்களும் தாங்கள் ஆடுகின்ற இடத்திற்கு ஏற்ப பெயரினைப் பெறுகின்றார்கள். அது வருமாறு: 1. பந்தெறிபவர் (Pitcher) 2. பந்தைப் பிடிப்பவர் (Catcher) 3. முதல் தளக் காப்பாளர் (First Base Man) 4. Qg6sTl_stub 56Tá 3,mılil IT6Ti (Second Base Man) 5. மூன்றாம் தளக் காப்பாளர் (Third Base Man) 6. முன் தடுப்பாளர் (Short Stop) 7. இடப்புறக் காப்பாளர் (Left Fielder) 8. மையக்காப்பாளர் (Centre Fielder) 9. வலப்புறக் காப்பாளர் (Right Fielder) ஆட்டத்தில் பங்கு பெறும் ஆட்டக்காரர்களின் பெயர்களை ஆட்டத்திற்கு முன்கூட்டியே ஆட்ட அதிகாரிகளிடம் கொடுத்து, குறிப்பேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.