பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 ష్ర్ప மென் பந்தாட்டம் மாற்றாட்டக்காரர்கள் (Substitutes) 1) மாற்றாட்டக்காரர்கள் யார் என்பதையும் குழுவின் தலைவரானவர் அதிகாரியிடம் முன்கூட்டியே குறித்துக் கொடுத்துவிட வேண்டும். 2) மாற்றாட்டக்காரரை ஒரு ஆட்டக்காரருக்குப் பதிலாக சேர்க்க விரும்புகிற ஒரு குழுத்தலைவர், தன் விருப்பத்தை நடுவரிடம் கூற வேண்டும். அந்த மாற்றத்தை நடுவரானவர் எதிர்க்குழுத் தலைவருக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் அறிவிப்பார். 3) எந்த இடத்தில் யாருக்காகப் போய் ஒரு மாற்றாட்டக்காரர் நின்று ஆடுகின்றாரோ, அந்த இடத்தின் பெயரால்தான் அவர் அழைக்கப்பட வேண்டும். அதாவது: பந்தடித்தாடுபவருக்குப் பதிலாக வந்தால் பந்தடித் தாடுபவர் என்றும்; தடுத்தாடுபவருக்குப் பதிலாக வந்தால் தடுத் தாடுபவர் என்றும்; தள ஓட்டக்காரருக்குப் பதிலாக வந்தால் தள ஒட்டக்காரர் என்றும்; பந்தெறிபவருக்குப் பதிலாக வந்தால் பந்தெறிபவர் என்றும் அழைக்கப்பட்டு ஆட்டத்தில் பங்கு பெறுகிறார். 4) பந்தடிக்கும் ஆட்டக்காரராக மாற்றாட்டக்காரர் ஆட அனுமதிக்கப்பட்டாலும், அவர் ஆடும் வரிசைப்படிதான் (Batting Order) வந்து ஆட வேண்டும். 5) மாற்றாட்டக்காரர் மாறிய குறிப்பினை நடுவர் அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும், அவர் ஆடுகின்ற