பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா థ్రి 97 ஆட்டம் விதிப்படி முறையாக ஏற்றுக்கொள்ளப் படுகின்ற தென்றே அர்த்தம் ஆகும். 6) பந்தெறிபவர் என்று பதிவு செய்யப்பட்ட ஆட்டக்காரருக்குப் பதிலாக ஒருவர் மாற்றப்பட வேண்டுமென்றால், அதை உடனே மற்ற ஆட்டக் காரருக்குப் பதிலாக ஆளை மாற்றுவதுபோல எளிதாகச் செய்துவிட முடியாது. குறிப்பிட்ட பந்தெறிபவர் எந்த பந்தடிக்கும் ஆட்டக்காரரை நோக்கி எறிந்து கொண்டிருக்கிறாரோ, அவரின் அந்த ஆடும் வாய்ப்பு (Turn) முடியும்வரை முழுதும் எறிந்த பிறகுதான், மாற்றாட்டக்காரரை மாற்ற வேண்டும். நினைத்தவுடன் பந்தெறிபவரை மாற்றிவிட முடியாது. 7) ஒரு தடவை ஆட்டத்தை விட்டு வெளியேற்றப் பட்ட ஒர் ஆட்டக்காரர், மீண்டும் வந்து ஆட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. ஆனால், பயிற்சியாளராக (Coach) வந்து பங்கு பெறலாம். 8. எந்த ஆட்டக்காரரும் பந்தடிப்பவர் முன்னே வந்து அவரது பார்வையை அல்லது ஆட்டத்தை மறைப்பது அல்லது தொந்தரவு தருவது போல வேண்டுமென்றே நிற்கக் கூடாது. 5. விளையாடும் முறை (The Game) 1. போட்டி ஆட்டம் நடைபெற இருக்கின்ற ஆடுகளத்தின் தகுதியை, அது தரமாக இருக்கின்றதா இல்லையா என்பதை, விருந்தேற்கும் குழுவே (Home Team) தீர்மானித்து முடிவெடுக்கும்.