பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணப்படுகின்றன. இதில் மொழித் தேர்ச்சி மட்டிலும் அடைந்த பண்டிதர் பெருமகன்களின் பங்கு அதிகம். அழகியல் இன்றி, உணர்ச்சி இன்றி, புதுமை இன்றி, இலக்கணம் மட்டும் இருக்கும். இதுவா நவகவிதை ? இந்தச் சட்டத்தை உடைத்தவர் எழுச்சிக் கவிஞர் வ.கோ.சண்முகம. மின்னித் தெறிக்கும் புதிய சொல்லாக்கம், அலுப்பூட்டாத எளிய கதை சொல்லும் பாணி, புதிய வகை உவமைகள் , உருவகபிரமிப்புகள் இப் படியாக வார்க்கப்பட்டவைதான் அவரது இந்த நூல். கவிதைக்குள் கதை சொல்வது என்பது கத்தியின் மேல் நடப்பது மாதிரி! இந்தக் கலையரின் கைதேர்ந்தவராக தனி னை வெளிப்படுத்தியுள்ளார் வ.கோ. சண்முகம். காப்பியம் எனர் லும் வடிவத்தை எளிமைப் படுத் தி வ.கோ.சண்முகம் வார்த்திருக்கும் இந்த கவிதைக் கதைகள் தமிழ்க் கவிதை வரலாற்றுக்கு சிறப்பு சேர்க்கும் பதிவுகள் என்பதில் சந்தேகம் இல்லை. 'முத்தமிழறிஞர்', 'செம்மொழிச் செம்மல்' தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ள 'மாவெண்கோ என்ற புனைப்பெயர் தாங்கிய வ.கோ. சண்முகம் அவர்களின் இந்த நூலை இத் தருணத்தில் மீண்டும் வெளியிடுவதில் 'தமிழ்க்கூடம் புளகாங்கிதம் அடைகிறது! நேசமிக்க எஸ்.ராஜகுமாரன் பதிப்பு மற்றும் தொகுப்பாசிரியர்