பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

வ.கோ. சண்முகம்


எப்போதும் பூங்கண்ணி கமுக்க மாக எல்லாமே செய்கின்ற பழக்கம் உள்ளாள்! இப்போதும் அப்படித்தான் மகனி டத்தோஇல்லத்தரசி பொற்குயிலி தன்னி டத்தோ. உப்புப்பை ஒன்றுக்குள் திணித் திருந்த 'உயிருக்கும் உயிரான உடமை பற்றித் தப்பியும்ஒர் வார்த்தையதும் சொல்லவில்லை ! தவறென்றே மற்றவரும் கேட்கவில்லை ! கைகுவித்தே தன்வீட்டை வணங்கிப் பின்னர் கார்முகிலின் கிழிசலுக்குள் தொலைவில் தெரிந்த 'ஐயை எனும் தெய்வத்தின் கோவில் வணங்கி 'அறம்', ‘நீதி’ என்பதாக ஏதும் இருந்தால் மெய்எழுந்தே சீறட்டும் என்று முணுகி வீதிதனில் காவலர்கள் விரைவுப் படுத்த பைச்சுமையைத் தன்னுடலின் சுமையினோடு பத்திரமாச் சுமந்தபடி பயணம் ஆனாள் ! நடுஇரவில் துயில்கலைந்தே விழித்த சிங்கம் நல்லிசைதான் கிடைக்காமல் கத்தல் போலப் படபடத்தே பாய்ந்திட்டான் சினத்தின் தீயைப் பரவவிட்டான் ; குதித்திட்டான் மாதங்க கன்தான் ! வெடவெடத்தே நின்றார்கள் காவலர்கள் "வேலெதற்கு? வாள் எதற்கு உங்க ளுக்கே? கடலுப்பைச் சோற்றுக்கு அதிகம் சேர்த்துக் கட்டிடுங்கள் புடவைகளை இனிமேல்” என்றான்!” 5