பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெழுகுச் சிறகுகள் 11 இருவீரர் நடுவினிலே கைதி யாக இளித்தபடி நின்றிருந்தப் புலிநெஞ் சன்தான் "பெருமனசு பண்ணுங்கள்! நானே நாளைப் பிற்பகலில் தர்பார்தான் கூடு முன்னே தருமதுரை மகராசா உங்கள் வளிடத்தே தலைதன்னைக் கொடுத்தேனும் அதனைக் கொணர்ந்து தருகின்றேன் சக்தியமாய் ! கலகம் செய்தால் சரக்கினுக்கே ஆபத்து நேரும் !" என்றான். ஆசைக்கு நாயகியாய் ஆன வள்தான் அடுத்துவரும் இதயபுர மகிஷி தன்னின் நீசக்கயல் விழிகள் மேல் கண்ணிர் அருவி நெளிவதனைக் கண்டுவிட்ட மாதங் கன்தன் மீசைக்குள் நெருப்பேறல் போல்து டித்தான் ! 'விசும்பாதே என்கண்னே! அந்தவைரம் மேசைக்குள் வரும்வரைக்கும் தர்பா ரில்நான் வீற்றிருக்கப் போவதில்லை! உண்மை!' என்றான். பொன் அன்னம் கண்ணிரை ஒத்தி வைத்தாள் ! 'புதுத்திருடர் எவருமில்லை புலியோ, எலியோ என்எண்ணம் தனை அறிந்து முந்திக் கொண்டார் ! எனக்கூறித் தொடர்வதற்குள் அவளுள் ளத்தில் மின்னலது அடித்தாற்போல் ஏதோ நினைவு வீசிற்று மறுகணமே மதாங்கன் செவிக்குள் தன்ஊகம் ஒன்றினையே கிசுகி சுத்தாள் ; சாடையினால் புலிநெஞ்சன் தன்னைக்காட்டி !