பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

வ.கோ. சண்முகம்


'ஏய் கள்ளி கிழநாயே! வா வா! இங்கே எடுத்தவிழ்த்து மூட்டையதைத் திறந்து காட்டு ! மாய்மாலம் எங்கேதான் கற்றுக் கொண்டாய்? மகனுடனே நாடகமா ஆடு கின்றாய்? வாய்மட்டும் காதளவு இருக்கே உனக்கு வயசான காலத்திலா திருட்டுப் புத்தி? நாய்போலப் புலிநெஞ்சன் கிடப்பான் என்றே நம்பினேனே நரிபோல ஆகி விட்டான்! " என்றெல்லாம் மதாங்கன்தான் திட்ட லானான்! இடறிவிழுந்து தள்ளாடியகிழவி தொலைவில் நின்றிருக்கும் புலிநெஞ்சன் கைகளில் விலங்கை நேத்திரத்தால் பார்த்தவுடன் திகைத்துப் போனாள்! "பன்றிகளே என்மகன்தான் செய்த தென்ன ? பழிவிலங்கை என்கைகளில் மாற்றிமாட்டிக் கொன்றிடுங்கள் எனை யேனும் ! என்பிள் ளையைக் கொஞ்சமுமே வதைக்காதீர் விடுங்கள்!' என்றாள். பொன் அன்னம் பொறுமைதனை இழந்தே, கிழவி பூங்கண்ணி வசமிருந்த பைச்சு மையைத் தன் கையால் பறித்தெடுக்க முயன்றாள் ! கிழவி தடுத்தபடி, 'அடிபாவி நீயும் இந்த வன்நெஞ்சர் கையாளா? வெட்கம் கெட்டு வந்தவனுக்கே முந்தானை விரித்திட்டாயோ? என் உயிரே போனாலும் இதனை இனிமேல் யாரிடத்தும் தரமாட்டேன் போ போ!' என்றாள்.