பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெழுகுச் சிறகுகள் 17 மேல்தொடர முடியாமல் மூச்ச டங்க விழிஇரண்டும் இருட்டிடவே பேச்சி ழந்தாள்! கால்வைத்த இடமெலாம் கோயி லாகும் கண்ணி எனும் அவ்வன்னைக் கைதையும் முடியப் பால்சுவையை இழந்ததொரு கன்றே போலப் பாவிமகன் புலிநெஞ்சன் கதற லானான்! சேல்கண்ணி அன்னத்தின் ஊகம் தனக்குத் தீராப்பழி தந்ததினால் மதாங்கன் நொந்தான்! அத்தையவள் செத்ததையும் ஆளன் கையில் அரசாங்க விலங் கேறிக் கிடப்ப தையும் சுத்துகின்ற சுற்றத்தார் பேச்சி னாலே கண்டறிந்தப் பொற்குயிலி பிள்ளை யோடே குத்துகின்ற அவமானம், சோகம் எல்லாம் குடும்பத்தை அழித்ததெனக் கூனிக் கூசிச் சத்தமிடா அழுகையுடன் அங்கே வந்தாள்! சர்வாதி காரியவன் காவில் வீழ்ந்தாள்! 'கெட்டதொரு ஆசையதால் சகவா சத்தால் கீழ்புத்தி அவருக்கும் முளைக்கலாச்சு ! பட்டதெலாம் போதும் இனி இதோ இதோ அத்தைப் பாட்டியவள் உயிர்குடித்த எமன்தான்!” என்றே விட்டெறிந்தாள் சிறுபேழை ஒன்றை! அன்னம் விரைந்தோடி எடுப்பதற்குள் குதிரை மிரண்டே நட்டநடு மார்பதனில் மிதித்துத் தள்ள நடைபாதைக் கல்மோதி அவளும் செத்தாள்!