பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

வ.கோ. சண்முகம்


சரித்திர முதுமை பெற்றச் சாகாத உதயம் அந்நாள்! ஒருத்தனின் குரலே கோடி உத்தம ஞானக் குரலாய்ப் பொருத்தமாய் முழங்க வந்தப் புனிதநாள் அறிவின் தெளிவைத் திருத்தியதோர் நன்னாள் மானுடன் தேவனாய் உயர்ந்த பொன்னாள்! நானூற்று நாற்பத் தெட்டு ஆண்டுகள் நகர்ந்த பின்பும் வானூரும் நிலவாய்ப் பூவாய் வரலாற்று துணுக்குகளுக்குள் தானூன்றி நிற்கும் கனுவா தலயுத்தம் ரானா சங்கன் ஊனுறும் குருதியை, வீர உரைகல்லாய்ச் செய்த யுத்தம்! இந்தியத் துணைக்கண் டத்தில் இளம்பிறைக் கொடியை நாட்ட அந்நநாள் பாடுபட்ட அடலேறு நிகர்த்த பாபர் சிந்தியகனல் மூச்சுக் குள்ளே சிக்கியே திணற லானான், சந்தன மேனி மன்னன் தறுகண்மிகுரானா சங்கன்!