பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெழுகுச் சிறகுகள் 21 சொந்தமாய்ப் படைசா தனங்கள் சொற்பமே கொண்டோன் ஆனால் சிந்தனை வளத்தில்; அன்னை தேசத்தின் மீதே வளர்த்து வந்தநல் பாசம் தன்னில் வாஞ்சையில் குறைவே இல்லான்! கொத்தவோ, வந்தாய்? என்றே கொடும்பகைமேல் பாய்ந்தான்ரானா! தன்படைகள், தன்i ரத்தில் தருக்குற்றே கொக்க ரித்த மன்னனாம் பாபர் என்ற மலையினையே மோதலானான்! மின்னின வாட்கள் எல்லாம் மேகமும் ரத்த மாச்சு! பன்னரும் பயங் ரப்போர்! பாபரே திகைக்க லானான்! பாரினும் இளையோன் ஆனால் பாரம்பரிய சூழ்ச்சித் திறனில், ஆபத்தைக் கணிக்கும் போக்கில், ஆட்களை நிறுக்கும் கலை'யில் தீபத்தைப் போன்ற புத்தி தீட்சண்யம் படைத்தோன் ரானா! லாபத்தின் பெட்டி தூங்கும் இலக்கினைப் புரிந்து கொண்டான்!