பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

வ.கோ. சண்முகம்

22 வ. கோ. சணி முகம் தன்பலத்தைக் கணித்தி டாமல் தாய்மண்ணைக் கவ்வ வந்த வன்நெஞ்சர் பலஹlன த்தை வகையாகக் கணித்துக் கொண்டான்! பின்வாங்கல் போல ரானா போக்குகள் காட்ட லானான் தன்னரும் படையும் குழம்ப தடந்தோளைத் தொங்கப் போட்டான்! அடுத்தடுத்தே பெற்ற வெற்றி ஆகாய மிதப்பில், போரின் கடுத்தத்தைக் குறைத்துக் கொண்டே களியாட்டம் போட்டான்பாபர் படுத்தது வீரம்: வேகம்! பாசறை எங்கும் படையோர் நடத்திய கேளிக் கைகள் நாட்கணக்கில் தொடர லாச்சு! சக்கர வர்த்தி பாபர் தன்னையே மறந்து போனான்! எக்காளம் முழங்க வில்லை ! யாழிசையே கேட்க லாச்சு மக்காத வீரம் சுருண்டே மங்கையர் கும்பல் சூழ்ந்து மொக்காகச் சிறகவிழ்க்கும் முந்தானை பின்னே போச்சு!