பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 மெழுகுச் சிறகுகள் 27 கண்ணிமைக்குள் தன்னை வைத்தே காத்தரண்செய்து வந்தத் திண்ணுறு தடந்தோள் வீரன், செஞ்சேர்ற்றுக் கடனுணர்ந்தோன் கண்ணியன் காசிம் கானைக் கடும்போதை வெறியால் பாபர் மண்ணிலே உதைத்துத் தள்ளி வாளினால் மாய்த்தே விட்டான்! கனுவாவின் முற்று கையில் கல்வினான் மண்ணை பாபர்! இனியநல் சகாக்க ளையும் இணையிலா வீர ரோடே பனைஎனக் குவிந்த செல்வம், படைபொருள் அத்த னையும் வினையாக வந்த மதுவால் விரைவிலேஇழந்தான், சோர்ந்தான்! அடக்கியே ஆளவந்தான், அடங்கியே முடங்கி விட்டான்! 'படைக்கலம் தோற்க வில்லை. பாபியாம் நான்தான் தோற்றேன்! அடைக்கலம் கேட்கும் பொல்லா அவக்கேடும் - எனக்கே யன்றோ? மடையனாய்ப் போனேன்!” என்றே மருகினான், மழைத்தான் கண்ணிர்!