பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெழுகுச் சிறகுகள் 29 சத்தியம்செய்த அவன்தான் சபதத்துடன் நிற்கவில்லை! மெத்தவும் ஆசை யாக விலையுயர்ந்த பொன்னால் - வார்த்து; ரத்தினங்கள் வைத்திழைத்த ஆறேழு கூஜாக் களோடே அத்தனைமதுக் கோப்பைகளையும் அப்போதே போட்டு டைத்தான்! தோற்காத பாபர் எனையே தோற்கவே செய்த பேயே நாற்கால்கொள் பிராணியாக நல்லவர் தமையும் ஆக்கும் தாற்காலிக சைத்தானே போ போ !' என்றே நாற்காலி மேசைகூட நடுங்கவே கூச்சலிட்டான்! வெள்ளியால் பொன்னால் மற்றும் வெறும்பித்தளை யாலே செய்த கள்ளுற்றும் கிண்ணம் கோப்பை : கவின்சித்திர சாடியனைத்தும் அள்ளியே நசுக்கி நொறுக்கி அங்கேயே தான மாக வள்ளி சாய் எளியோர்க் கெல்லாம் வழங்கியே அமைதி கொண்டான் 22